நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட் பகல் நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும் : எம்.பி. கோரிக்கை

Namakkal news- நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட் பகல் நேரத்தில் மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-09-30 02:30 GMT

Namakkal news-நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன்

Namakkal news, Namakkal news today- நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட் பகல் நேரத்தில் மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் லோக்சபா தொகுதி எம்.பி. மாதேஸ்வரன், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் நகரில், சேந்தமங்கலம் ரோட்டில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. நாமக்கல் பகுதியைச்சேர்ந்த கோழிப்பண்ணையாளர்கள் பீகார், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கோழித்தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம், புண்ணாக்கு, தவிடு போன்ற மூலப்பொருட்களை கொள்முதல் செய்து, அங்கிருந்து சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்குள்ள கூட்ஸ் ஷெட் போதிய வசதி இல்லாமல் மிகச்சிறியதாக உள்ளது. மேலும் தற்போது இந்த கூட்ஸ் ஷெட்டில் இரவு பகல் 24 மணி நேரமும், சரக்குகளை கிளியரிங் செய்து வெளியே எடுக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு செய்வது, குறிப்பாக இரவு நேரத்தில் சரக்குகளை ரயில் பெட்டிகளில் இருந்து இறக்கி லாரிகளில் எடுத்துச்செல்வது மிகவும் சிரமமாக உள்ளது என, தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் நகரின் ஒதுக்குப்புறத்தில் ரயில் நிலையம் மற்றும் கூட்ஸ் ஷெட் அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் சரக்குகளை இறக்கி எடுத்துச்செல்ல சரியான வெளிச்சம் மற்றும் ரோடு வசதி இல்லை. மேலும் இரவு நேரத்தில் சரக்குகளை இறக்குவதற்கு கூலி தொழிலாளர்களும் சரியாக கிடைப்பதில்லை.

எனவே இரவு பகல் 24 மணி நேரமும், சரக்கு இறக்கும் முறையை கைவிட்டு, வழக்கம் போல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தொழிலாளர்கள் ரயில் பெட்டியில் இருந்து சரக்குகளை ஏற்றி லாரியில் ஏற்றும் முறையை பின்பற்ற வேண்டும். எனவே நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட்டை ஓசூர் போன்ற நகரங்களில் உள்ளது போல் பகல் நேரத்தில் 12 மணி நேரம் வேலை செய்யும் முறைக்கு மாற்றி அமைத்து, கோழிப்பண்ணையாளர்களுக்கு உதவ வேண்டும் என அந்த கடிதத்தில் எம்.பி. மாதேஸ்வரன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News