அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.21,000 சம்பளம் வழங்க கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரி சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-10-21 12:00 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட சிஐடியு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் 32வது மகாசபைக் கூட்டம், ஜேடர்பாளையத்தில் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பாலுசாமி வரவேற்றார். மாவட்ட உதவி செயலாளர் பொன்னம்பலம் கொடியேற்றி வைத்தார். மாவட்ட தலைவர் அசோகன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தங்கமணி. தையல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராயப்பன் உள்ளிட்ட பலர் பேசினார்கள். சங்க புதிய மாவட்ட தலைவராக சங்கரன், மாவட்ட செயலாளராக காசிவிசுவநாதன், பொருளாளராக சரவணவேல், துணை தலைவராக குணசேகரன், துணை செயலாளராக பொன்னம்பலம் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டனர். முறை சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ 21,000 வழங்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வு ஊதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், விபத்து மரணம் நிவாரணம் ரூ 2 லட்சம் ஆகவும், இயற்கை மரண நிவராணம் ரூ. ஒரு லட்சம். திருமண நிதி 25,000, பிரசவ நிதி ரூ.30 ஆயிரம், கல்வி உதவி தொகை 5ம் வகுப்பிலிருந்து நலவாரியத்தின் மூலம் வழங்க வேண்டும்.

தொழிலாளர்கள் உரிய காலத்தில் பதிவு புதுப்பிக்கத் தவறினால் விபத்து மற்றும் மரண நிவாரணம் ஓய்வூதிய நிவாரணம் போன்ற பணப்பயன்கள் மறுக்காமல் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் சரவணன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News