நாமக்கல் மாவட்டத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 1 லட்சம் பேருக்க தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-05 00:15 GMT

பைல் படம்.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 14 லட்சத்து, 64 ஆயிரத்து, 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை,  முதல் தவணை தடுப்பூசி 12,32,726 பேருக்கும் (84.19 சதவீதம்), இரண்டாம் தவணை தடுப்பூசி 9,0 4,660 பேருக்கும் (61.78 சதவீதம்) செலுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை நடைபெற்ற 22 மெகா தடுப்பூசி முகாம்களில், 7,34,037 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். இன்று 5ம் தேதி சனிக்கிழமை 23ம் கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துகள், முனிசிபாலிட்டிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள 412 நிலையான முகாம்கள், 24 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 436 முகாம்களில், காலை 9 முதல், மாலை 5 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இதுவரை ஒரு கொரோனா தடுப்பூசி போடாதவர்களும், முதல் தவணை போட்டு இரண்டாம் தவணைக்காக காத்திருப்பவர்களும் அவசியம் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, கொடியே கொரோனா தொற்றில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News