நாமக்கல் மாவட்டத்தில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், 500 மையங்களில், 50 ஆயிரம் பேருக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-25 02:00 GMT

தமிழகம் முழுவதும் நாளை 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த, அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில்,  நாளை மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள், பஸ் நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட பஞ்சாயத்து அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.

நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் 35 மையங்கள், கொல்லிமலை வட்டாரத்தில் 31 மையங்கள், சேந்தமங்கலம் வட்டாரத்தில் 18 மையங்கள், எருமப்பட்டி வட்டாரத்தில் 30 மையங்கள், மோகனூர் வட்டாரத்தில் 26 மையங்கள், நாமக்கல் வட்டாரத்தில் 41 மையங்கள், திருச்செங்கோடு வட்டாரத்தில் 40 மையங்கள், கபிலர்மலை வட்டாரத்தில் 28 மையங்கள், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 29 மையங்கள், பரமத்தி வட்டாரத்தில் 35 மையங்கள், பள்ளிபாளையம் வட்டாரத்தில் 46 மையங்கள், வெண்ணந்தூர் வட்டாரத்தில் 27 மையங்கள், இராசிபுரம் வட்டாரத்தில் 45 மையங்கள், புதுச்சத்திரம் வட்டாரத்தில் 28 மையங்கள், எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் 37 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நடமாடும் வாகனங்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 இடங்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் பொதுமக்களுக்கு, முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News