நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடக்க உள்ள நீட் தேர்வில், 6,120 பேர் பங்கேற்க உள்ளனர்.

Update: 2024-05-04 09:15 GMT

Namakkal news- நாளை நீட் தேர்வு (பைல் படம்) 

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில், நாளை நடைபெறும் நீட் தேர்வில் மொத்தம் 6,120 பேர் எழுதுகின்றனர்.

இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்பிற்காக, தேசிய தேர்வு முகமை மூலம் (NTA) நாளை 5ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்பிற்காக, தேசிய தேர்வு முகமை மூலம் (என்டிஏ) இன்று 5ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 23,81,833 மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். தேசிய அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சுமார் 1,88,398 இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 1,55,216 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களில் மொத்தம் 6,120 மாணவ மணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் ஏற்கனவே பிளஸ் முடித்து நீட் தேர்வை எழுதி தோல்வியுற்றவர்கள் மற்றும் எதிர்பார்த்த அளவு மதிப்பெண்கள் கிடைக்காதவர்கள் (Repeaters) உள்ளிட்டோர் இந்த தேர்வில் கலந்துகொள்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5,276 பேர் நீட் தேர்வு எழுத ஹால் டிக்கட் வழங்கப்பட்டது. அவர்களில், 5,210 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த ஆண்டில், 6,120 பேர் நீட் தேர்வை எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்காக மாட்டத்தில் மொத்தம் 11 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, பாச்சல் பாவை இன்ஜினியரிங் கல்லூரி தேர்வு மையத்தில் 1,000 பேர், நாமக்கல் தாலுகா காவேட்டிப்பட்டி குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளியில் 700 பேர், நாமக்கல் டிரினிடி இண்டர்நேஷனல் பள்ளியில் 700 பேர், கீரம்பூர் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 670 பேர், நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 600 பேர், நாமக்கல் தி ஸ்பெக்ட்ரம் அகாடமிபள்ளியில் 500 பேர், குமாரபாளையம் தாலுகா, பல்லக்காபாளையம் ராயல் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் 550 பேர், எக்ஸல் இன்னஜினியரிங் கல்லூரியில் 450 பேர், திருச்செங்கோடு தாஈலுகா, கே.எஸ்.ஆர் அக்சரா அகாடமியில் 430 பேர், வித்யவிகாஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் 280 பேர், ஏமப்பள்ளி ரமணி இண்டர்நேஷனல் பள்ளியில் 240 பேர் என மொத்தம் 11 மையங்களில் 6,120 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஒவ்வொரு மையத்திற்கும் 5 போலீசார் மற்றும் அதிகாரிகள், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து மாணவ மாணவிகள் தேர்வில் கலந்துகொள்ளலாம். தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமையின் நாமக்கல் மாவட்ட குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News