நாமக்கல்லில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை : ராஜேஸ்குமார் எம்.பி. தகவல்..!

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 171 திருநங்கைகள் கண்டறியப்பட்டு, 158 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என, ராஜேஷ்குமார் எம்.பி.கூறினார்.

Update: 2024-06-21 09:45 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு, திருநங்கைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் உமா.

நாமக்கல்லில் 158 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்: ராஜேஸ்குமார் எம்.பி. தகவல்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 171 திருநங்கைகள் கண்டறியப்பட்டு, 158 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என, ராஜேஷ்குமார் எம்.பி.கூறினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஸ்குமார், 46 திருநங்கைகளுக்கு ரூ. 3.93 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை என அழைக்க சட்டம் இயற்றினார். இந்தியாவிலேயே, முதல் முறையாக, தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம், 2008ம் ஆண்டு கருணாநிதி உருவாக்கினார். விடியல் பயணத்திட்டத்தின் கீழ், இலவச பஸ் சேவையை மகளிரை போல், திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கலாம் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 171 திருநங்கைகள் கண்டறியப்பட்டு, 158 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேல் உள்ள 50 திருநங்கைகளுக்கு, மாதம் ரூ. 1,500 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதுவரை, 12 திருநங்கைகளுக்கு, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், சுயதொழில் மானியம் தலா ரூ. 50,000 வீதம், மொத்தம் ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பல்வேறு அரசுத்துறை சார்பில், 46 திருநங்கைகளுக்கு ரூ. 3.93 லட்சம் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, சப் கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, சிஇஓ மகேஸ்வரி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News