திருச்செங்கோட்டில் கல்லூரி பஜார் நிகழ்ச்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்..!

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர. கல்லூரியில்,கல்லூரி பஜார் நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் உமா துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.

Update: 2024-09-19 10:30 GMT

திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் நடைபெற்ற, கல்லூரி பஜார் நிகழ்ச்சியை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா துவக்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டார்.

திருச்செங்கோட்டில் கல்லூரி பஜார் நிகழ்ச்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

நாமக்கல் ;

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர. கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கல்லூரி பஜார் நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் உமா துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண்களின் பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்தும் வகையில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களின் தரத்தினை மேம்படுத்தி விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் கல்லூரிகளில், கல்லூரி பஜார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி பஜாரில், குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் காட்சிப்படுத்துவதன் மூலமாக இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, விற்பனையினை அதிகப்படுத்திட உதவுகின்றது.

குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நவீன சந்தைப்படுத்துதல், மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலமாக உற்பத்தி மற்றும் பொருட்களின் தரம் உயர்கிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைகிறது. அதன் அடிப்படையில் 2024-&2025 ஆண்டு நாமக்கல் மாவட்டத்திற்கு 6 கல்லூரி பஜார் நிகழ்ச்சிகள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் கல்லூரி பஜார் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர்செல்வராசு, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, கே.எஸ்.ஆர் கல்லூரி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீனிவாசன், கே.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி துணை முதல்வர்கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News