நாமக்கல் பகுதியில் விடிய விடிய கனமழை ஒரே இரவில் 118.மி.மீ., மழை பெய்தது
நாமக்கல்லில் விடியவிடிய கனமழை கொட்டியது. ஒரே இரவில் 118 மி.மீ மழை பெய்ததால், நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.;
பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் இருந்து வந்தது. வெப்பம் 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மிதமான அளவில் மழை பெய்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் வெப்பம் தனிந்து காணப்பட்டது. நேற்று இரவு 8 மணி முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டை ரோடு, சேலம் ரோடு, நேதாஜி சிலை, ஏ.எஸ். பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், ரோட்டில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டது.
இன்று காலை 6 மணிவரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:
நாமக்கல் நகரம் 118 மி.மீ., நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 39.20 மி.மீ., குமாரபாளையம் 34.20 மி.மீ., மங்களபுரம் 18.40 மி.மீ., மோகனூர் 29 மி.மீ., ப.வேலூர் 7 மி.மீ., புதுச்சத்திரம் 82 மி.மீ., ராசிபுரம் 120 மி.மீ., சேந்தமங்கலம் 51 மி.மீ., திருச்செங்கோடு 10 மி.மீ., கொல்லிமலை 56 மி.மீ., மாவட்டம் முழுவதும் மொத்தம் 624.80 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.