நர்சிங் பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவி மாயம் - தாய் போலீசில் புகார்!
மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று வந்தார். மே 17 அன்று கோவிலுக்கு சென்றதாக கூறிய அவர், வீடு திரும்பவில்லை.;
கோபியில் 17 வயது மாணவி மாயம் - தாய் போலீசில் புகார் :
ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் ரங்கம்மாள் தம்பதியரின் மகள் பிரித்திகா (17), கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று வந்தார். மே 17 அன்று கோவிலுக்கு சென்றதாக கூறிய அவர், வீடு திரும்பவில்லை.
மகளை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், அவரது தாய் ரங்கம்மாள், சிறுவலூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரித்திகாவை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.