நாமக்கல்லில் வரும் 17ம் தேதி மட்கும் உரம் தயாரிப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்லில் வருகிற 17ம் தேதி மட்கும் உரம் தயாரித்தல் குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-05-13 01:45 GMT

பைல் படம்.

நாமக்கல்லில் வருகிற 17ம் தேதி மட்கும் உரம் தயாரித்தல் குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 17ம் தேதி செவ்வசய்க்கிழமை காலை 10 மணிக்கு, பண்ணைக்கழிவுகளை மட்கும் உரமாக்குதல் மற்றும் மானாவாரி நிலங்களுக்கேற்ற மண்வள மேம்பாடு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மட்கும் பண்ணைக் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாடணீத்தல், மட்கும் உரம் தயாரித்தல், செறிவூட்டப்பட்ட மட்கும் உரம் தயாரித்தல், உரமிடும் முறைகள், மட்கும் உர பயன்பாட்டின் நன்மைகள், மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்த தேவையான அனுகுமுறைகள், வறட்சி மேலாண்மை, குறித்து தெளிவாக பயிற்சி அளித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்படும்.

மட்கும் உரம் தொழில்நுட்பம் மற்றும் மண்வளத்தை மேம்படுத்தும் உத்திகள் குறித்து செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்படும். இதில் விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News