நாமக்கல்: நவ. 25ல் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

நாமககல் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வருகிற 25ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2021-11-18 11:15 GMT

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் விதவையர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 25ம் தேதி,  மாலை 3 மணிக்கு கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில், மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தார்கள் கலந்துகொண்டு, தங்களின் கோரிக்கை மனுக்களை, இரண்டு பிரதிகளில் கலெக்டரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News