நாமக்கல் மாவட்டத்தில் இன்று 239 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 239 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை மொத்தம் 56,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-01-16 14:30 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, பரமத்திவேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் இன்று 16ம் தேதி மொத்தம் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இன்று 53 பேர் சிகிச்சை குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56,112, இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் 54,374 பேர். தற்போது மொத்தம் 1,216 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 522 பேர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News