கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Namakkal news- பரமத்திவேலூர் அருகே கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-05-01 03:30 GMT

Namakkal news- கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு (மாதிரி படம்)

Namakkal news, Namakkal news today- நாமக்கல், பரமத்திவேலூர் அருகே கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் தாலுகா, எம்.கந்தம்பாளையம் அருகே உள்ள, பெருங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ், விவசாயி. இவரது மகன் சஞ்சய் (21), ப.வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பு 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 29ம் தேதி காலை 9 மணிக்கு, மாணவர் சஞ்சய், கல்லூரிக்கு தேர்வு எழுத செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் கந்தம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் ப.வேலூர் செல்லும் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது வெப்பம் தாங்காமல் திடீரென்று ரோட்டில் மயங்கி விழுந்தார். அதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெயில் அதிகமாக உள்ளது. அதிகாலையிலேயே வெப்ப அளவு அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேர வெப்ப நிலை 105 டிகிரியை தாண்டி உள்ளதால், பல இடங்களில் அனல் காற்று வீசுகிறது. பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்லவே பயப்படும் சூழல் நிலவுகிறது. அதிக வெப்பம் காரனமாக கல்லூரி மாணவர் சஞ்சய் ரோட்டில் மயங்கி விழுந்து, வெப்ப அயற்சி காரனமாக இறந்திருக்காலம் என்று தெரியவருகிறது. இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News