கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர் கோர்ட்டில் சரண்

Namakkal news- கோர்ட் உத்தரவின்படி, இழப்பீட்டுத் தொகையை செலுத்த தவறிய சிவில் கான்ட்ராக்டரை கைது செய்ய போலீசாருக்கு, உத்தரவிட்டதால், கான்ட்ராக்டர் நுகர்வோர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2024-04-30 09:45 GMT

Namakkal news- சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில், இழப்பீட்டுத்தொகை ரூ. 22,22,392க்கான, டிமாண்ட் டிராப்டை அவரது குடும்பத்தினரிடம், நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் வழங்கினார்.

Namakkal news, Namakkal news today- நுகர்வோர் கோர்ட் உத்தரவின்படி, இழப்பீட்டுத் தொகையை செலுத்த தவறிய சிவில் கான்ட்ராக்டரை கைது செய்ய போலீசாருக்கு, உத்தரவிட்டதால், கான்ட்ராக்டர் நுகர்வோர் கோர்ட்டில் சரன் அடைந்தார்.

நாமக்கல், அழகு நகரில் வசித்து வருபவர் ராமசாமி மனைவி கலைவாணி (50). இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் சதீஷ் பாபு என்பவரிடம் கலைவாணி ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டுமானப்பணிக்காக ரூ. 48 லட்சத்தை கலைவாணியிடம் பெற்றுக் கொண்ட சதீஷ்குமார் ஒப்பந்தப்படி வீட்டை முழுமையாக கட்டித் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கலைவாணி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு, வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ 30,00,000 பணத்தை 4 வாரத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது.

கோர்ட் உத்தரவுப்படி 4 வார காலத்திற்குள் பணத்தை செலுத்தாததால் சதீஷ்குமாரை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கலைவாணி கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு பின்னர் மாவட்ட கோர்ட் நீதிபதி ராமராஜ் உறுப்பினர் ரமோலா ஆகியோர் கான்ட்ராக்டர் சதீஷ்குமாரை கைது செய்ய நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கடந்த மாதம் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று 30-04-2024-ல் கட்டிட ஒப்பந்ததாரர் சதீஷ்குமார் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சரணடைந்தார். இதனை ஏற்றுக் கொண்ட கோர்ட் அடுத்த 4 வாரத்துக்குள் ரூ. 30 லட்சத்தை கலைவாணிக்கு வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

* மற்றொரு வழக்கில் நாமக்கல் தும்மங்குறிச்சியில் உள்ள பெரியசாமியின் மனைவி சிவகாமிக்கு (40), அவரது கணவர் இறந்ததற்கான இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை ரூ. 50 லட்சமும், இழப்பீட்டுத் தொகை ரூ. ஒரு லட்சமும் வழங்க வேண்டும் என்று தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த தொகையை வழங்காததால் சிவகாமி சமர்ப்பித்த முறையீட்டை ஏற்று நாமக்கல் எச்டிஎப்சி இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளரை கைது செய்யுமாறு காவல்துறைக்கு நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் உறுப்பினர் ஆர். ரமோலா ஆகியோர் இன்று (30-04-2024) உத்தரவு பிறப்பித்தனர்.

* இன்னொரு வழக்கில் நாமக்கல், நல்லிபாளையத்தை சேர்ந்த குழந்தைவேல் மகன் ரவிச்சந்திரன் என்பவருக்கு சேவை குறைபாட்டிற்காக நாமக்கல் கிளை ஐடிபிஐ வங்கி மேலாளர் ரூ 40,000 வழங்க கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு வழங்கியிருந்தது. வங்கி அந்த தொகையை வழங்காததால், ரவிச்சந்திரன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் முறையீடு செய்தார். அதைத் தொடர்ந்து நாமக்கல் ஐடிபிஐ வங்கி மேலாளரை கைது செய்யுமாறு போலீசாருக்கு நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் இன்று (30-04-2024) உத்தரவு பிறப்பித்தனர்.

* மேலும் ஒரு வழக்கில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள வெண்ணங்கல் காடு கிராமத்தில் வசிக்கும் சுப்ரமணியத்துக்கு, அவரது மகன் தமிழ்ச்செல்வன் இருசக்கர வாகன விபத்தில் இறந்ததால் வழங்க வேண்டிய தனிநபர் காப்பீட்டு தொகை தொகையை வழங்குமாறு நாமக்கல்லில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். தீர்ப்பின்படி இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்திய ரூ 22,22,392/- க்கான டிமாண்ட் டிராப்ட்யை மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் இன்று சுப்பிரமணியத்திடம் வழங்கினார்.

Tags:    

Similar News