நாமக்கல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுக்கு கொரேனா தொற்று

கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-11-24 03:45 GMT

பைல் படம்.

நாமக்கல் அருகே உள்ள கோனூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 9 ஆசிரியர்கள், 18 ஆசிரியைகள் என மொத்தம் 27 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், பள்ளி தலைமையாசிரியர் அன்புராஜ் தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையொட்டி அவர் பள்ளிக்கு லீவ் எடுத்துக் கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ராஜேஸ்வரி, கவிதா என இரண்டு ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் லீவ் எடுத்துக் கொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும், மாணவ, மாணவிகள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்ததில் இதுவரை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தற்போது, மாணவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை மற்றும் சுகாதார துறையினர் தெரிவித்தனர். ஒரே பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News