நாமக்கல்லில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டி

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வுக்காக, நாமக்கல்லில் செஸ் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.

Update: 2022-07-19 08:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற செஸ் ஓலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டியை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை மகாபலிபுரத்தில் வருகிற 28ம் தேதி துவங்கி ஆக.10 வரை நடைபெறுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உ த்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கான செஸ் போட்டி இன்று நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார்.

அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 180 -க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டிகான ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட செஸ் விளையாட்டு சங்கத்தினர் செய்திருந்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, பிஆர்ஓ சீனிவாசன், மாவட்ட செஸ் விளையாட்டு சங்க செயலாளர் ஞானசேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News