போடி - சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல எம்.பி. கோரிக்கை!

போடி - சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல மாதேஸ்வரன் எம்.பி. மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

Update: 2024-06-26 02:45 GMT

பட விளக்கம் : நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், புதுடில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்நவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அருகில் முன்னாள் எம்.பி. சின்ராஜ்.

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், புதுடில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்நவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அருகில் முன்னாள் எம்.பி. சின்ராஜ்.

போடி - சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல எம்.பி. கோரிக்கை

நாமக்கல், 

போடி - சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல மாதேஸ்வரன் எம்.பி. மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, கொமதேக வேட்பளர் மாதேஸ்வரன், புதுடில்லியில் பார்லிமெண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பியாக பதவியேற்றார். தொடர்ந்து, அவர், முன்னாள் எம்.பி. சின்ராஜூடன் சென்று, மத்திய ரயில்வே, தகவல் ஒளி பரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஸ்நவை அவரது அறைக்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினார்.

அப்போது, தமிழகத்தில், போடிநாயக்கனூரில் இருந்து சென்னை செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை உள்ளிட்ட 27 இடங்களில் பிஎஸ்என்எல் மூலம் செல்போன் டவர்கள் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News