கேரளாவில் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்; குமாரபாளையம் அருகே போலீசார் சுட்டதில் ஒருவர் பலி

Namakkal news- கேரளாவில் ஏடிஎம் மெசினை உடைத்து, பணத்தை திருடிக்கொண்டு, கண்டெயினர் லாரியில் தப்பிய வட மாநில கொள்ளையரை, குமாரபளையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசார் சுட்டதில் ஒருவர் பலியானார்.

Update: 2024-09-27 09:30 GMT

Namakkal news- கேரளாவில் ஏடிஎம் மெசினை கொள்ளையடித்துக்கொண்டு, காருடன் கண்டெயினர் லாரியில் தப்பிய, கொள்ளையர்களை, வெப்படை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

Namakkal news, Namakkal news today- கேரளாவில் ஏடிஎம் மெசினை உடைத்து, பணத்தை திருடிக்கொண்டு, கண்டெயினர் லாரியில் தப்பிவந்த வட மாநில கொள்ளையர்களை, குமாரபளையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசார் சுட்டதில் ஒரு கொள்ளையர் பலியானார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படை அருகே இன்று காலை, மெயின் ரோட்டில் கண்டெயினர் லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ரோட்டில் டூ வீலர்களில் சென்றுகொண்டிருந்த சிலரை அந்த வாகனம் இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல், மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கண்டெயினர் லாரியை சுற்றிவலைத்து மடக்கிப் பிடித்தனர். கண்டெய்னர் லாரிக்குள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியுடன் ஒரு காரில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.ரஞ்சித் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் வட இந்திய கொள்ளையர்களை நோக்கி சுட்டதில், கொள்ளையர் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றவர்களுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலையில், கண்டெயினர் லாரியில் வந்த வட மாநிலத்தை சேர்ந்தவர்கள், கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு பேங்க் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக்கொண்டு, அந்த ஏடிஎம் இயந்திரம் மற்றும் அவர்கள் வந்த ஒரு கார் ஆகியவற்றை கண்டெயினர் லாரியில் ஏற்றிக்கொண்டு தப்பி வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் சேலம் & ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில், குமாரபாளையம் அருகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வெப்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News