நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களுக்கு பாரத பிரதமரின் ஸ்காலர்ஷிப் திட்டம்

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் ஸ்காலர்ஷிப் பெற தகுதியான மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-13 10:30 GMT

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் ஸ்காலர்ஷிப் பெற தகுதியான மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை வெப்சைட்டில் (National Scholarship portal) விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும், தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ 2.50 லட்சம், இத்திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.10.2024. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் 31.10.2024 ஆகும்.

புதிய விண்ணப்பம்:

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியர், முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும். எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும், மாணவ மாணவியர் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால், ஓடிஆர் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்யப்பட்ட செல்போனிற்கு வரும். மேற்கண்ட ஓடிஆர் நம்பரை பயன்படுத்தி, 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

புதுப்பித்தல்

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர் தேசிய கல்வி உதவித்தொகை வெப்சைட்டில் National Scholarship portal Renewal Application பதிவு செய்து, 2024-25 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் வெப்சைட்டிலும், நாமக்கல் மாவட்டபிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்படடோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியும் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News