குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் உருவ படத்திற்கு மலரஞ்சலி

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் மறைவுக்கு மவுன ஊர்வலம் மற்றும் மலரஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.;

Update: 2024-10-13 11:30 GMT

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் மறைவுக்கு மவுன ஊர்வலம், மலரஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சியின் முன்னாள் தலைவர் தனசேகரன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலமின்றி இறந்தார். இதனையொட்டி குமாரபாளையம் பெரிய மாரியம்மன் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் ராஜம் தியேட்டர் முன்பிருந்து, புதிய தாலுக்கா அலுவலகம் வரை நடந்தது.

நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி உள்ளிட்ட கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தனசேகரன் திருவுருவப்படம் வைக்கப்பட்ட வாகனம் முன்னே செல்ல, அனைவரும் அதனை பின்தொடர்ந்து கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு சென்றனர். தாலுக்கா அலுவலகம் முன்பு உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலை அருகே, தனசேகரனின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தனசேகரனின் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News