வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு அழைப்பு

Namakkal news- வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-24 02:45 GMT

Namakkal news- நீச்சல் பயிற்சிக்கு அழைப்பு (பைல் படம்)

Namakkal news, Namakkal news today- நாமக்கல்லில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், வரும் 27 முதல், ஜூன் 3 வரை கோடைகால நீச்சல் பயிற்சி பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்சார்பில், பொதுமக்களுக்கான கோடைகால நீச்சல் பயிற்சி முகாம், இரண்டாம் கட்டமாக சிறப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட பயிற்சி முகாம், கடந்த, 1ம் தேதி துவங்கி 12ம் தேதி முடிந்தது. இரண்டாம் கட்டமாக, கடந்த 14ம் தேதி துவங்கி, வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. வரும் 27 முதல் மே 8 வரை மூன்றாம் கட்டமாகவும், மே 10 முதல் 21 வரை நான்காம் கட்டமாகவும், மே 23 முதல் ஜூன், 3 வரை, ஐந்தாம் கட்டமாகவும் நீச்சல் பயிற்சி கற்றுத்தரப்படும். தினமும், காலை 6 முதல் 7 மணி வரை, 7 முதல் 8 மணி வரை, 8 முதல் 9 மணி வரையும், மாலை 4 முதல் 5 மணி வரை, 5 முதல் 6 மணி வரையும், நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும்.

வரும், ஏப். 27 முதல் மே 8 வரை மூன்றாவது கட்ட பயிற்சி பெற விரும்புவோர் அனைவரும், இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு 12 நாட்களுக்கான கட்டணம் ரூ. 1,416. இந்த தொகையை, ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். கோடை வெப்பத்தை தணிக்க மற்றும் இனி வருங்காலங்களில் நடக்கும் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள தயாராவதற்கும், நீச்சல் கற்றுக் கொடுக்கும் பயிற்சி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில், முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு, சிறப்பாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீச்சல் தெரிந்தவர்களுக்கு, காலை, 9 முதல் மாலை 5 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ. 59 ரூபாய் செலுத்தி நீந்தலாம்.

மேலும் விபரங்களுக்கு பயிற்சியாளர் சிங்குதுரையை 85086 41786 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொண்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News