குழந்தை திருமணத்தை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும்: நீதிபதி வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் குழந்தைகள் திருமணத்தை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.;

Update: 2025-01-27 07:00 GMT

பட விளக்கம் : நாமக்கல்லில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி வேலுமயில் பேசினார். அருகில் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

குழந்தை திருமணத்தை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும்: நீதிபதி வேண்டுகோள்

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் குழந்தைகள் திருமணத்தை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

நாமக்கல்லில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மனிதநேய வாரவிழா நடைபெற்றது. போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுசெயலாளர் நீதிபதி வேலுமயில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களுக்கு தான் வன்கொடுமை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜாதியின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுவதில்லை. சாதித்தவர்களுக்கு அவர்கள் செய்த நற்பணிக்காக மட்டுமே அங்கீகரித்து விருது வழங்கப்படுகிறது. இன்றும் ஜாதியை தவறாக பயன்படுத்துபவர்களும் உள்ளனர். அது என்ன என்று தெரியாதவர்களும் உள்ளனர். எஸ்.டி பிரிவினர் இன்னும் தங்கள் குழந்தைகளை அதிகம் படிக்க வைப்பதில்லை. அவர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு இருந்தாலும் அவர்கள் படிக்காததால் தகுதி பெற முடியவில்லை.

2023ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகம் நடந்தது. குமாரபாளையம், பள்ளிபாளையம், கொல்லிமலை பகுதிகளில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெற்றுக்கொண்டு உள்ளது. தொழில், கல்வியில் சிறந்த மாவட்டமாக நாமக்கல் இருந்தாலும், குழந்தை திருமணம் தான் அதிக அளவில் நடக்கிறது. இதை தடுக்க அனைவரும் பாடுபட வேண்டும். சமூகத்தில் பாதிக்கப்படும் ஏழை எளியவர்கள் அது குறித்து புகார் அளிக்க முன்வர வேண்டும். ஒருகாலத்தில் பணம் இருப்பவர் மட்டுமே வழக்கில் வெற்றி பெற முடியும் தற்போது தாலுகா அளவிலும், மாவட்ட அளவிலும் இலவச சட்ட உதவி மையங்கள் உள்ளன. மனு அளித்தால் அவர்களுக்கு இலவசமாக உரிய தீர்வு அளிக்கப்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை யாரும் ஜாதிய பாகுபாடு பார்க்கக் கூடாது, இது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி ராஜு, பழங்குடியின திட்ட அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் கந்தசாமி, பழஙகுடியின மக்கள் பிரதிநிதி சீனிவாசன், சிஎஸ்ஐ சர்ச் அன்னிஜோஷப் மற்றும் திரளான கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News