24.56 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்படும்..!

24.56 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்படும்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-01-28 07:30 GMT
24.56 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்படும்..!
  • whatsapp icon

மல்லசமுத்திரம், ஜன. 28:
வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ₹24.56 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அமைக்கும் பணியை ஈஸ்வரன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதியதாக கலையரங்கம் அமைக்க ₹24,56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா நேற்று மாலை நடந்தது.

இதில் ஈஸ்வரன் எம்எல்ஏ கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தாமணி வரவேற்று பேசினார். இதில் அட்மா குழு தலைவர் பழனிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், பாலவிநாயகம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News