அனைத்து கோழிப்பண்ணைகளும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல்: கலெக்டர்

Chicken Poultry Farm - நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கோழிப்பண்ணைகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-26 02:45 GMT

பைல் படம்.

Chicken Poultry Farm -நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கோழிப்பண்ணைகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நமக்கல் மாவட்டத்தில், 25,000 மற்றும் அதற்கு மேற்பட்ட கோழிகளைக் கொண்டு புதிய கோழிப்பண்ணைகள் தொடங்குவதற்கு, மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே கோழிப்பண்ணைகள் அமைக்க வேண்டும் என்ற விதிமுறை, ஏற்கனவே தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது.

வருகிற 2023ம் ஆண்டு ஜன.1 முதல், குறைந்தபட்சம் 5,000 கோழிகள் மற்றும் அதற்கு மேல் எண்ணிக்கை உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் தொடங்க, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறவேண்டும். எனவே புதிய சுற்றுச்சூழல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 5,000 கோழிகள் மற்றும் அதற்கு மேல் எண்ணிக்கை உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளும் இயங்குவதற்கு ஜன.1 முதல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணையாளர்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுவாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News