நாமக்கல் தொகுதியில் 42 மனுக்கள் ஏற்பு: நாளை இறுதி பட்டியல்

நாமக்கல்லில் நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில்16 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 42 மனுக்கள் ஏற்பு

Update: 2024-03-29 02:15 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாமக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்கள், மாவட்ட ஆட்சியர் உமா, மத்திய பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் ஆகியோர் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் 42 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 16 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது. நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு, அதிமுக, திமுக கூட்டணியில் கொமதேக, பாஜக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 47 பேர் 58 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 27ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. நேற்று 28ம் தேதி வேட்புமனு மனுக்கள் மீதான பரிசீலனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தலைமை வகித்தார். தேர்தல் கமிஷன் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலை வகித்தார்.

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் பல்வேறு காரணங்களினால் 16 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 42 மனுக்கள் ஏற்க்கப்பட்டதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளை மார்ச் 30ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். நாளை மாலை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியில் அறிவிக்கப்படும்.

Tags:    

Similar News