நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் 2 அமைச்சர்கள் திடீர் ஆய்வு

Namakkal Sree Anjaneyar Temple- நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி திடீர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-07-04 03:45 GMT

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆய்வு செய்தனர்.

Namakkal Sree Anjaneyar Temple- நாமக்கல்லில் நடைபெற்ற, தி.மு.க.வின் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் துணைத்தலைவர்கள், டவுன்பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் பேர் நாமக்கல் வந்திருந்தனர். அவர்கள் சனிக்கிழமை மதியமே நாமக்கல் வந்து நாமக்கல் நகரில் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கினார்கள். இதனால், நாமக்கல் பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்களும் நிரம்பி வழிந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல், மாநாட்டிற்காக வருகை தந்த முக்கிய வி.ஐ.பி.க்கள் பலரும் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். இதனால் கோயில் அமைந்துள்ள கோட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு மாநாடு முடிவடைந்தபிறகு, அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேர் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள கோயில் சுற்றுப் பிரகாரத்தை ஆய்வு செய்தனர். மேலும், கோயில் திருப்பணி தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கோயில் உதவி கமிஷனர் இளையராஜாவிடம் கேட்டறிந்தனர். பின்னர் ஸ்ரீ நரசிம்மர் கோயிலுக்கும் அவர்கள் சென்று அங்கு பக்தர்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். அமைச்சர்களுக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News