குமாரபாளையம் அருகே வாய்க்காலில் அமைக்கப்பட்ட மேடையால் விபத்து அபாயம்

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் அமைக்கப்பட்ட மேடையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-07 10:15 GMT

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் அமைத்த மேடையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்த பகுதியில் உள்ள வாய்க்காலில் ஆங்கிளால் இரு கால்கள் ஊன்றப்பட்டு, படித்துறை அருகே மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் வரும் செடி,கொடிகள் செல்ல வழியின்றி சிக்கி கொள்கிறது. வாய்க்காலில் பெரியவர்கள் துணி துவைக்க வரும்போது, கூட வரும் குழந்தைகள் இந்த மேடை மீது விளையாடி வருகிறார்கள். இவர்கள் வாய்க்காலின் ஆழமான பகுதியில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில குடிமகன்கள் இதன் மீது அமர்ந்து மது குடித்து வருகிறார்கள். இவர்கள் தவறி வாய்க்காலில் விழுந்தாலும் போதையில் எழுந்திருக்க முடியாமல் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் இது போல் வாய்க்காலில் மேடை அமைக்க அனுமதி கிடையாது. அப்படி யார் போட்டாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், அந்த மேடை உடனடியாக அகற்றப்படும் என்றனர்.

Tags:    

Similar News