மூதாட்டியை கல்லால் தாக்கிய இளைஞர் கைது!

பள்ளிபாளையம் அருகே வழித்தடம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், மூதாட்டியை கல்லால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-06-10 15:00 GMT

மூதாட்டியை கல்லால் தாக்கிய இளைஞர் கைது

பள்ளிபாளையம் அருகே வழித்தடம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், மூதாட்டியை கல்லால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் குயிலங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 60. இவரது மனைவி பழனியம்மாள், 57. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜா, 29. பழனியம்மாளுக்கும், ராஜாவிற்கும் வழித்தடம் பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை பழனியம்மாள் தனது விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்து விட்டு, ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அப்போது ராஜா குறுக்கிட்டு பழனியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார். வாய்த்தகராறு முற்றி, தகாத வார்த்தையால் திட்டியதுடன், கல்லால் தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த பழனியம்மாலை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் நடந்த விபரம் குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜாவை கைது செய்தனர்.

Tags:    

Similar News