தார் சாலைப்பணி தாமதம் : பொதுமக்கள் அதிருப்தி..!

குமாரபாளையத்தில் சாலைப்பணி தாமதம் ஆவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்து வருகிறார்கள்.;

Update: 2024-06-11 13:15 GMT

குமாரபாளையத்தில் கத்தாளபேட்டை பகுதியில் சாலைப்பணி தாமதம் ஆவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்து வருகிறார்கள்

குமாரபாளையத்தில் சாலைப்பணி தாமதம் ஆவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்து வருகிறார்கள்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கத்தாளபேட்டை பகுதியில், தார்ச்சாலைப்பணி நடைபெற வேண்டி, நீண்ட நாட்களுக்கு முன், சாலைகளை கொத்தி எடுத்து, ஜல்லிகள் போடப்பட்டன. தார்ச்சாலை அமைக்க காலதாமதம் ஆவதால், நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

விசைத்தறி தொழிற்சாலைகள் இந்த பகுதியில் அதிகம் இருப்பதால், நூல்கள் கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்கள் எடுத்து வரவும் டெம்போக்கள் கூட செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதனால் விரைவில் இந்த சாலையை புதிய தார் சாலையாக,மாற்ற இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் நடந்து வரும் பகுதி என்பதால் அரசு அதிகாரிகள் தார்ச் சாலையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துவிட்டதால் தனியார் பள்ளி பேருந்துகள் இந்த வழியாக வரும். இதனால் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் அரசு அதிகாரிகள் இவைகளை கருத்தில் கொண்டு கொத்திக்கிடக்கும் இந்த சாலையை விரைவாக முடித்து தார்ச்சாலையாக முடித்துத் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News