சேற்றில் சிக்கி ஒன்றன் பின் ஒன்றாக மூன்று வாகனங்கள் மோதல்

சேலம் -கோவை புறவழிச்சாலையில் சேற்றில் சிக்கி ஒன்றன் பின் ஒன்றாக மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்தனர்.;

Update: 2024-06-13 02:31 GMT

குமாரபாளையம் அருகே விபத்துக்குள்ளான கார்.

சேலம் -கோவை புறவழிச்சாலையில் சேறும் சகதியும் தேங்கி நிற்பதால் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி 10மாத காலமாக நடந்து வருகிறது. இதனால் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. டி.மார்ட் அருகே சாலை வளைவில் கழிவுநீர் வெளியேறி, சேறும் சகதியுமாக இருப்பதால், வாகன விபத்து அடிக்கடி ஏற்பட்டு, பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் காலை 08:30 மணியளவில், தனியார் பஸ், முன்னால் சென்ற கார் மீது மோத, அந்த கார், அதற்கு முன்னால் சென்ற ஜீப் மீது மோதியது. இதில் காரில் வந்த மூதாட்டி உள்பட நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News