பழ மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு..!

சவுதாபுரம் ஊராட்சியில் 140 வளரும் பழ மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கும் , மாவட்ட எஸ்.பி.க்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2024-06-11 05:30 GMT

வெட்டப்பட்டுள்ள வளரும் பழ மரக்கன்றுகள் 

பள்ளிபாளையம் ஒன்றியம், சவுதாபுரம் ஊராட்சியில் 140 பழ மரச்செடிகளை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, ஊராட்சி மன்ற தலைவி ஜெயந்தி நந்தகோபாலன் சார்பில், மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட எஸ்.பி.க்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில்  குறிப்பிட்டுள்ளதாவது:

பள்ளிபாளையம் வட்டாரம் சௌதாபுரம் ஊராட்சியில் மேட்டுக்காடு, மியா வாக்கி என்ற இடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு சுமார் 200க்கும் மேற்பட்ட பழச் மரச்செடிகள் வைக்கப்பட்டிருந்தது.

அந்த பழச்மரச்செடிகளில் சுமார் 140 மரச்செடிகளை சமூக விரோதிகள் வெட்டி சாய்த்து விட்டனர். அந்த இடத்தில் ஏற்கனவே சிலர் இலவச வீட்டு மனை பட்டா கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது குறிப்படத்தக்கது. எனவே இந்த பல வகையான பழ மரச்செடிகளை வெட்டியவர்ளின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரங்கள் சுற்றுச் சூழலுக்கு அவசியமானவைகள். அவைகளை வெட்டுவது வளரும் குழந்தைகளை வெட்டுவதற்குச் சமமாகும். இதைப்போன்ற மூர்க்கத்தனமான செயல்களை செய்தவர்கள் மீது நிச்சயமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News