குமாரபாளையத்தில் விஜய் கட்சியினர் நலத்திட்ட உதவிகள்..!

குமாரபாளையம் விஜய் கட்சியினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 2026 தேர்தலில் விஜய் முதல்வராக பாடுபட வேண்டும் என மாநில பொதுச் செயலர் கோரிக்கை விடுத்தார்.

Update: 2024-06-14 11:30 GMT

குமாரபாளையம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடந்த நலத்திட்ட வழங்கும் விழாவில் மாநில பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று, அரசு பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்களுக்கு நினைவு பரிசு, பதக்கம், சால்வை அணிவித்து, கல்வி உதவித்தொகை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் கட்சியினர் – 2026 தேர்தலில் விஜய் முதல்வராக பாடுபட வேண்டும், மாநில பொதுச் செயலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குமாரபாளையம் விஜய் கட்சியினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 2026 தேர்தலில் விஜய் முதல்வராக பாடுபட வேண்டும் என மாநில பொதுச் செயலர் கோரிக்கை விடுத்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாளையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி. ஆனந்த் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கணவனை இழந்து தவிக்கும் கைம் பெண்கள் இருவருக்கு தையல் இயந்திரம், அழகு நிலைய நடத்தி வரும் பெண்ணிற்கு அழகு சாதன பொருட்களும் மேலும் ஏழைப் பெண்களுக்கு சேலைகள், பாசம் ஆதரவற்றோர் மையத்திற்கு மூன்று சக்கர நாற்காலிகள், மாதம் தோறும் முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.   நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

இதில் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:

2026 தேர்தலில் விஜய் முதல்வராக பாடுபட வேண்டும். பல ஆயிரம் கோடிகளை விட்டு விட்டுத்தான் அரசியலுக்கு விஜய் வருகிறார். பணம் அவருக்கு பெரிதல்ல. சேவை தான் பெரிது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News