மாற்றுத்திறனாளி சங்கத்தினர் தனியார் பள்ளி முன் தர்ணா

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தனியார் பள்ளி முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-30 11:00 GMT

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தனியார் பள்ளி முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தனியார் பள்ளி முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2013 முதல் 2016 வரையிலான சமயத்தில் கத்தேரி சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுதா, 34, என்ற மாற்றுத்திறனாளி, ஆசிரியையாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு, சிகிச்சை செய்து வந்தார்.

பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில், பள்ளியில் கொடுக்கப்பட்டதாக கூறும் தனது ஆசிரியை கல்வித்தகுதி சான்றிதழை தன்னிடம் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சான்றிதழ் வழங்காததால், தான் உறுப்பினராக உள்ள தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தில் புகார் செய்ய, சங்க நிர்வாகிகள், நேற்று காலை முதல் மாலை வரை பள்ளி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் பள்ளிக்கு நேரில் வந்து, நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காலை 10:00 மணியளவில் தொடங்கிய போராட்டம் மாலை 04:00 மணிக்கு மேலும் நீடித்தது.

Tags:    

Similar News