50 நாட்கள் கடந்து நீர் மோர் வழங்கி வரும் நில முகவர் சங்கத்தினர்

குமாரபாளையம் நில முகவர் சங்கம் சார்பில் 50 நாட்கள் கடந்தும் நீர் மோர் வழங்கி வருகிறார்கள்.;

Update: 2024-05-14 12:30 GMT

குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் 50வது நாள் நீர் மோர் வழங்கும் விழா தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்தது.

குமாரபாளையம் அருகே ஆலங்காடு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தமிழகத்திலேயே அதிக பத்திரங்கள் பதிவு செய்யும் அலுவலகங்களில் முக்கிய அலுவலகமாக உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினசரி ஆயிரக்கனகானோர் வந்து செல்கின்றனர். தற்பொழுது கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழ்நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் நூற்றுக்கணக்கானோருக்கு தாகம் தீர்க்கும் வகையில், குமாரபாளையம் தாலுக்கா நிலமுகவர்கள் நலச் சங்கத்தின் சார்பில், சங்க தலைவர் சின்னசாமி தலைமையில், நீர் மோர் பந்தல் 50 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

ஆவண எழுத்தர்கள் சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், சண்முகசுந்தரம் பங்கேற்று, நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்கள். செயலாளர் செல்லமுத்து, பொருளாளர் சிவராமன் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீர்மோர் பெற்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறந்தது பெரும் பயனாக உள்ளது என பொதுமக்கள் கூறினர்.

இந்நிலையில் குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் 50வது நாள் நீர் மோர் வழங்கும் விழா தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்தது. தினம் ஒரு உறுப்பினர் எனும் வகையில் இங்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் சொத்து பத்திரப்பதிவு, ஈ.சி. போடுதல், வீடு, இடம் அடமானம் பத்திரம் பதிவு என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

கடும் கோடை வெப்பம் காரணமாக, இங்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பிரதான சாலைக்கு வந்தால்தான் உணவு விடுதி, டீக்கடை உள்ளிட்ட கடைகள் உள்ளன. அதனால் பொதுமக்களின் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மட்டுமில்லாமல், பத்திர எழுத்தர்கள், பத்திர எழுத்தர் அலுவலக உதவியாளர்கள் என பல தரப்பினரும் பயன்பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News