பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்

பள்ளிபாளையத்தில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் பழமையான மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2024-05-14 01:10 GMT

பள்ளிபாளையத்தில் பெய்த கனமழை காரணமாக புதன் சந்தை பகுதியில் சாலையோரம் பழமையான மரம் சாய்ந்தது.

பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், திங்களன்று பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாக்கடை கால்வாய்களில் நீர் நிரம்பியது. .மேலும் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை புதன் சந்தை என்ற பகுதியில் உணவகம் வெளியே சுமார் 10 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று சாலையின் மத்தியில் சாய்ந்து விழுந்தது.

மேலும் மரம் சாய்ந்ததின் காரணமாக அப்பகுதியில் இருந்த மின்சார வயர்கள் துண்டிப்பு ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. மேலும் அருகில் உள்ள காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி பலத்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பினர் சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் வெப்படை அருகே சின்னார்பாளையம் பகுதியில் மழையின் காரணமாக சேலம் சாலையில் மரம் சாய்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. இதன்பின், மரம் பொக்லின் மூலம் அகற்றப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags:    

Similar News