குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்கள் அகற்றகோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மின்வாரியத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.;
குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்கள் அகற்றகோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மின்வாரியத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
மின்வாரிய உதவி இயக்குனருக்கு அனுப்பிய புகார் மனுவில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தெரிவித்திருப்பதாவது :
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் முதல் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு வரை சாலைகளில் இருபுறமும் உள்ள தேவையற்ற மின்புதைவட ஒயர்கள், மின்பெட்டிகள் உள்ளது. இதனால் சாலைகளில் நடந்து செல்பவர்களுக்கு இடையூராக, மின்பெட்டிகளின் கதவுகள் எல்லாம் திறந்து கிடக்கிறது. சிறு குழந்தைகள் தவறுதலாக கைகளை வைத்தாலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற புதைவட ஒயர்கள் வைத்துள்ளனர்.
கேபிள்கள் சிறு சந்துகளில் வைத்து இருப்பதால், அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கும், குழந்தைகளுக்கும் ,சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் மிகவும் இடையூராக உள்ளது. விஷ ஜந்துக்களும் தங்கும் இடமாக மாறியுள்ளது.
ஆகையால் தாங்கள் பொதுமக்களின் நலன் கருதி அந்த இடத்தினை ஆய்வு செய்து தேவையற்ற ஒயர்கள், மின்பெட்டிகளை அகற்றுமாறு மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.