தேமுதிக. உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் தொகுதி தேமுதிக சார்பில் உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-19 15:45 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற தொகுதி தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல்ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் படிவத்தை சிறப்பு அழைப்பாளர்கள் கேப்டன் மன்ற மாநில துணை செயலர் சுல்தான் பாஷா, மாவட்ட செயலர் விஜய்சரவணன், வழங்கினார்கள்.

குமாரபாளையம் தொகுதி தே.மு.தி.க. சார்பில் உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் தொகுதி தே.மு.தி.க. சார்பில் உள்கட்சி தேர்தல்ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், குமாரபாளையம் நகர செயலர் நாராயணசாமி  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கேப்டன் மன்ற மாநில துணை செயலர் சுல்தான் பாஷா, மாவட்ட செயலர் விஜய்சரவணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொண்டர் ஒருவர் , கேப்டனை எங்கள் டி.வி.யிலாவது காட்டுங்கள். அப்போதுதான் மக்கள் நம்புவார்கள், என்றதும், சிறப்பு அழைப்பாளர்கள் கூறுகையில், ஆகஸ்ட் 25 அவரது பிறந்தநாளில் காட்ட ஏற்பாடுகள் செய்யப்படும், என கூறினார்கள். இதை கேட்டதும் அனைவரும் கைகள் தட்டி வரவேற்றனர். ஒன்றிய செயலர் மணியண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News