தமிழக பள்ளிகளில் முகக்கவசம் அணியும் நடைமுறை அமல்: அரசு கடும் உத்தரவு..!

கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-01 06:59 GMT

தமிழக பள்ளிகளில் முகக்கவசம் அனைவரும் அணிந்து வரும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழக பள்ளிகளில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் அடுத்தடுத்து வெளியாயின. இதனால், படிப்பு சான்றிதழ்களை பெற அதிகளவில் மாணவ-மாணவியர்கள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை, முகக்கவசம் அவசியம் அணியுமாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது அவசியம் என அறிவித்துள்ள தமிழக அரசு இதை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதையடுத்து, பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News