தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை

அடுத்த 24 மணி நேரங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.;

Update: 2024-05-07 15:34 GMT

பைல் படம்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் தலா 6,

பையூர் (கிருஷ்ணகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பாரூர் (கிருஷ்ணகிரி) தலா 5,

ஆம்பூர் , மேலாலத்தூர் (வேலூர்), தர்மபுரி , வாணியம்பாடி  நாட்றாம்பள்ளி தலா 4,

ஒகேனக்கல்,  வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), டேனிஷ்பேட்டை (சேலம்), கேஆர்பி அணை, கிருஷ்ணகிரி, அரூர், ஆலங்காயம் , கெலவரப்பள்ளி அணை , குடியாத்தம் , குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 3,

மேட்டூர் , நடுவட்டம் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பாலவிடுதி (கரூர்), சேலம், பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), சத்தியமங்கலம், திருப்பத்தூர் , ஆனைமடுவு அணை (சேலம்), போச்சம்பள்ளி ,ஓமலூர் , திருப்பூர்  தலா 2,

விரிஞ்சிபுரம்  (வேலூர்), ஊத்தங்கரை, செங்கம், ஏற்காடு , விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), மாரண்டஹள்ளி , சோத்துப்பாறை (தேனி), பாப்பிரெட்டிப்பட்டி, தேன்கனிக்கோட்டை , தேவாலா , கேத்தி, கீழ்கோத்தகிரி எஸ்டேட், பந்தலூர் (நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி), சங்கரி துர்க்கம் (சேலம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 1.

அதிகபட்ச வெப்பநிலை :

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது.

திருச்சி 107.78, மதுரை விமான நிலையம் 107.06, கரூர் பரமத்தி 106.7, பாளையங்கோட்டை - 106.7 மதுரை நகரம் 106.16, ஈரோடு 105.44, வேலூர் - 104.9, திருத்தணி 104.18, தஞ்சாவூர் - 104, மீனம்பாக்கம் -101.48, சேலம் - 100.94, கோவை - 100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

08.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.05.2024 மற்றும் 11.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 08.05.2024 முதல் 11.05.2024 வரை: அடுத்த 4 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 07.05.2024: தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

07.05.2024 முதல் 11.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

07.05.2024 மற்றும் 08.05.2024 வரை: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Tags:    

Similar News