மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸாருடன் தள்ளு முள்ளு

Marxist Communist Party struggle in Madurai

Update: 2022-06-23 10:30 GMT

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணியில் போலீஸார் தள்ளிவிடப்பட்டதால்  போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும்  இடையே தள்ளுமுள்ளு  ஏற்பட்டது.

மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ரயில்வேயை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் சிலையில் இருந்து பேரணியாக ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ரயில்வே நிலையம் வந்தவுடன் போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி ரயில் நிலையத்திற்குள் ஓடிச் சென்றனர்.இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், சில போராட்டக்காரர்கள் காவலர்களை தள்ளிவிட்டு  ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Tags:    

Similar News