கரூரில் ஒன்றியக்குழு கூட்டம்: உறுப்பினர்களுக்கு தகவல் தர கோரிக்கை

ஒன்றியத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தும்போது, உறுப்பினர்களுக்கு தகவல் தர ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்.

Update: 2021-12-08 13:30 GMT

கரூர் ஒன்றியக் குழு கூட்டத்தில் பேசுகிறார் தலைவர் பாலமுருகன்.

ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ஆய்வு நடத்தும் அதிகாரிகள், உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் அழைத்துச் செல்ல ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.   ஒன்றியக் குழு தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் தங்கராஜ், பிடிஓவினர் பழனிகுமார், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைவர் பாலமுருகன் பேசும்போது, மக்கள் பிரச்னை தொடர்பாக ஒன்றிய அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளில்  ஆய்வுக்கு செல்லும்போது, கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். என்ன அப்போது தான் பொதுமக்கள் பிரச்னைகளை அதிகாரிகளுக்கு விளக்கி, மக்கள் தேவைகளையும் கூற முடியும்  என பேசினார்.   

தொடர்ந்து என்ஆர்ஜிஎஸ் திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பணிகள், அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து கவுன்சிலர்களின் விவாதம் நடந்தது. பின்னர் ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   கூட்டத்தில்,  தமிழ்செல்வன், ராஜேஸ்வரி, தங்கமணி உள்ளிட்ட  கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News