கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் பொது பார்வையாளர் முன்னிலையில் நடத்தப்பட்டது.

Update: 2024-04-08 15:47 GMT

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூர் பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குபதிவு அலுவலர்களுக்கு தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை நடைபெற்றது. இதனை  கரூர் எம்பி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் நேரில் பார்வையிட்டார்.

இது குறித்து தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவார் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கரூர். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற (19.04.2024) அன்று நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கணினி முறை சுழற்சியில் பணி ஒதுக்கீடு இரண்டு கட்டமாக நடைபெற்றது.

கரூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட 1313 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தாந்தோணி அரசு கலைக்கல்லூரியிலும். அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட 1105 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வள்ளுவர் மேலாண்மைக் கல்லூரியிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத்தொருதி 1441 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு புலியூர் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி மற்றும் செட்டிநாடு இராணி மெய்யம்மை மெட்ரிக் பள்ளியிலும், வேடசந்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட 1713 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வேடசந்தூர் மேல்நிலைப்பள்ளியிலும், விராலிமலை சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட 1200 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணம்பட்டி குமரன் பாலிடெக்னிக் கல்லூரியிலும், மணப்பாறை லெட்சுமி மெட்ரிக் மற்றும் சவுமா பப்ளிக் பள்ளியில் மணப்பாறை சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட 2301 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் என மொத்தம் 9073 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் அனைவரும் நேர்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடலும் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது. மாதிரி வாக்கு பதிவு வாக்கு பதிவினை முன்னதாக நடத்தி முடிப்பது என்பதை இந்த பயிற்சி வகுப்பின் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் படிவம் 120 வழங்கப்பட்டு அஞ்சல் மூலம் வாக்குபதிவு செலுத்தியுள்ளனர்.

மேலும் தபால் மூலம் வாக்கு செலுத்தாமல் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

பயிற்சி பெற்று வரும் அலுவலர்கள் அனைவரும் தபால் வாக்குகள் அளிக்கும் வகையில் சிறப்பு (Specialization Center) அமைக்கப்பட்டுள்ளது. அதை அனைவரும் முழுமையாக பயன்படுத்தி தங்களது வாக்குகளை செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தேர்தல்பொது பார்வையாளர் தெரிவித்தார்.

முன்னதாக தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் நுண்பார்வையாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் தேர்தல் பொது பாவையாளர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவர்கள் முகமது பைசல்(கரூர்) மகேந்திரன்(கிருஷ்ணராயபுரம்), சுரேஸ்(குளித்தலை) உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News