மழைநீர் சூழ்ந்த குடியிருப்புகளை அமைச்சர் ஆய்வு

அதிகாலை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2021-12-04 11:30 GMT

மழை நீர் சூழ்ந்த குடியிருப்புகளை பார்வையிடுகிறார் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தபோது, கரூர் மாவட்டத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்த்து. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  கலைஞர் நகர் மற்றும் கணபதி நகர் பகுதிகளில் வாய்க்கால்களில் இருந்து வெளியேறும் நீர் ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முழங்கால் அளவு தண்ணீரில் அப்பகுதியினர் வாகனங்களை வெளியே எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ராயனூர் மேற்கு பகுதியில் தாழ்வான இடங்களில் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதுள்ளதால், அப்பகுதி குளம்போல் காட்சியளிக்கிறது. சில இடங்களில் நீர் வழிப்பாதை இல்லாத காரணமாக தேங்கிய மழைநீர் வெளியேற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பல முக்கிய சாலைகளில் மழைநீர் பெருமளவு தேங்கியுள்ளதால், வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கரூரில் பல்வேறு அரசுத் தொடர்பான நிகழ்ச்சிகளில் இன்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார்.

தொடர்ந்து அவர், மழை நீர்  சூழ்ந்துள்ள கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மழை நீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீரில் நடந்து சென்று கேட்டறிந்தார். தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற கரூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுளை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பிறப்பித்தார்.

Tags:    

Similar News