செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு

Update: 2021-04-02 12:30 GMT

கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியின் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது வீடு, கரூர் நகரில் உள்ள சகோதரர் அசோக் இல்லம் ராயனூரில் உள்ள நகர செயலாளர் தாரணி சரவணன் இல்லம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மதுரை வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது கரூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கரூர் வந்துள்ள துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News