கன்னியாகுமரி பகுதியில் கனமழையால் 1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பு

கனமழை காரணமாக, கன்னியாகுமரி பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பை சந்தித்து உள்ளது.

Update: 2021-11-15 12:30 GMT

குமரி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்,  நான்காவது நாளாக நீடித்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது. தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாகவும், மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும்,  மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.

இதனிடையே அணைகளில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது, இதன் காரணமாக திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு, கோதையாறு, பரளியாறு, பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகி ஊருக்குள் புகுந்ததால்,  மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து உள்ளன. சகாயநகர், தோவாளை, வெள்ள மடம், புத்தேரி, தெரிசனன்கோப்பு, உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.

மாவட்டம் முழுவதும் சுமார் 1200 க்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், விவசாயம் செய்யப்பட்ட நெல், வாழை, ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதே போன்று மாவட்டம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது, கோதை கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி உள்ளன.

Tags:    

Similar News