வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி சடலமாக மீட்பு

குமரியில், காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி, 3 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-11-15 11:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில்,  கடந்த 4 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பெய்து வரும் கனமழையின் காரணமாக குளங்கள் மற்றும் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு,  பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து,  வீடுகளை விட்டு மக்கள் வெளியேறாமல் வீட்டினுள்ளே முடங்கிக் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று பெய்த அதி கன மழையின் காரணமாக தாளக்குடி இறச்சகுளம் சாலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,  சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. நேற்றைய தினம் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் காய்கறி வியாபாரி,  அப்பகுதி வெள்ளப் பெருக்கினை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார்.

இவரை தீயணைப்பு துறையினர் தேடிவந்த நிலையில், இன்று சடலமாக மீட்டனர், ஆரல்வாய்மொழி போலீசார் உடலை கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News