சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்

தேர்தல் ஆணைய விதிகளை முறையாக பின்பற்றி இருந்தால் சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது என ஜிகே வாசன் கூறினார்.

Update: 2024-03-28 12:15 GMT

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து ஜிகே வாசன் பிரச்சாரம் செய்தார். 

தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடந்திருந்தால் சின்னங்கள் பற்றி கவலைப்பட்டு இருக்க வேண்டாம் எனவும் , குழப்பத்தை ஏற்படுத்தி ஓபிஎஸ் வெற்றியை தடுக்கலாம் என்பது இயலாது, 100 நாள் திட்டத்தில் சம்பள உயர்வு ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அளித்த பேட்டியில் கூறினார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தும், திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக செய்த சாதனைகளும் மேலும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று பல்வேறு மக்கள் நல திட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளதால் பாஜக கூட்டணி வேட்பாளரான ஜோதி வெங்கடேசனுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது , தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இன்று ரூபாய் என்பது ஊதியம் உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் உதவும் என்பதும் இதை யாரும் தடுக்க நினைக்க கூடாது.

தேர்தல் ஆணைய விதிகளை முறையாக பின்பற்றி இருந்தால் சின்னங்கள் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கூறுவதை தவிர்த்திருக்கலாம் எனவும் , ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ் போல் பலரை நிறுத்தி குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அவரது வெற்றியை தடுக்க இயலாது என தெரிவித்தார்.

இந்தப் பிரச்சார நிகழ்வில் பாஜகவை  சேர்ந்த ருத்ரகுமார் , சோழனூர் ஏழுமலை ,  பாமகவை சேர்ந்த  மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் , த.மா.கா மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் கார்த்திக் மற்றும் ஐஜேகே நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News