இந்திரா நகர் பகுதியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா எப்போது?

கோனேரி குப்பம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் இயங்கும் நியாய விலை கடை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி இப்போது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-05-20 05:30 GMT

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டடம் .( தற்போது இயங்கி வரும் இடம் ) 

பொதுமக்களுக்கு அன்றாட தேவைகளுக்கான அரிசி , சர்க்கரை,  பாமாயில்,  பருப்பு உள்ளிட்ட பொருட்களை தரமானதாக நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக கூட்டுறவு துறை வழங்கி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  இயங்கும் பழைய  நியாயவிலை கடைகளுக்கு மாற்றாக புதிய கட்டிடத்தில் இயங்கும் வகையில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நியாய விலைக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோனேரிகுப்பம் ஊராட்சி மன்ற பகுதியான இந்திரா நகர் பகுதியில் புதிய நியாய விலை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

தற்காலிகமாக அங்குள்ள ஊராட்சி மன்ற சேவை கட்டிடத்தின் ஒரு பகுதியில் நியாய விலை கடை இயங்கி வருவதை உடனடியாக புதிய கட்டப்பட்டுள்ள நியாய விலை கடைக்கு இடம் மாற்றம் செய்ய அப்பகுதி குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக கவனத்தில் கொண்டு புதிய கட்டிடத்தில் நியாய விலை கடை செயல்பட அறிவுரை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News