சேஷ வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.

Update: 2022-05-16 04:15 GMT

பிரம்மோற்சவ விழாவின் நாலாம் நாளான இன்று காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் காஞ்சிபுரம்  ஸ்ரீ வரதராஜ பெருமாள்

அத்தி வரதர் என உலகப் புகழ்பெற்ற காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த மூன்று நாட்களாக காலை மாலை என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் வண்ண வண்ண மலர்கள் சூடி ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

நேற்று காலை நடைபெற்ற கடை சேவை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் விடுமுறை தினம் என்பதால் காஞ்சி நகரில் குவிந்து எம்பெருமானை இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கண்டு அருள் பெற்றனர்.

இன்று நான்காம் நாளான காலை சிறப்பு வண்ண அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் தேசிகர் மண்டபத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

நகரில் வரும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுக்கிலும் சூடம் ஏற்றி பணிந்து வணங்கி இன்புற்று செல்கின்றனர்.


Tags:    

Similar News