பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி..!

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 183 பள்ளிகளை சேர்ந்த 13,819 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

Update: 2024-05-10 09:15 GMT

தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை விளம்பரப் பலகையில் மூலம் அறிந்து கொள்ளும் மாணவிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணி 30 நிமிடத்தில் பள்ளி கல்வித்துறையின் உயர் அலுவலர்களால் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 13819 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டம் மாநிலத்தில் 32 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு மாநிலத்தில் 25 வது இடத்தில் இருந்து தற்போது 32 வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  92 அரசு பள்ளிகளும் இரண்டு நகராட்சி பள்ளிகளும் 6 ஆதிதிராவிட நலப் பள்ளிகள் 19 அரசு உதவி பெறும் பள்ளிகள் 64 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 183 பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். 

இதில் தண்டலம் பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மற்றும் உமையாள்பரஞ்சேரி பகுதியில் செயல்படும் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகிய இரு அரசு பள்ளிகள் தேர்ச்சியில்  100 சதவீதத்தை எட்டியது.

அரசு பள்ளிகளை பொருத்தவரை 92 பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் மட்டுமே 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது. தனியார் பள்ளிகள் 64 செயல் பட்டு வந்த நிலையில் 27 பள்ளிகள் நூறு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 29 அரசு பள்ளிகள் தொண்ணூறு சதவீதத்திலிருந்து 98 சதவீத வரை மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்த அரசு தேர்வில் 1358 மாணவர்களும் 608 மாணவிகளும் என 1966 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் 903 அரசு பள்ளி மாணவர்களும் , 498 அரசு பள்ளி மாணவிகள் என மொத்தம் 1401 அரசு பள்ளி மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News